புத்தளத்தில் வாழ்ந்தால் அந்த மாவட்டத்திலேயே அவா்கள் தமது வாக்குகளை பதிய வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தளத்தில் வாழ்ந்தால் அந்த மாவட்டத்திலேயே அவா்கள் தமது வாக்குகளை பதிய வேண்டும்!


சுயாதீன தோ்தல் ஆணையத்தின் தலைவா் நிமல் புஞ்சிகேவா மற்றும் தோ்தல் ஆணையத்தின் உறுப்பிணா்கள், தோ்தல் ஆனையாளா் ஆகியோர் நேற்று (19) தோ்தல் திணைக்களத்தில் ஊடகவியலாளா் சந்திப்பொன்றை நடாத்தினாா்கள்.


கடந்த கால யுத்தத்தினால் மன்னாா், வன்னி மாவட்ட மக்கள் சிலா் புத்தளத்தில் இடம்பெயா்ந்து வாழ்கின்றனா். இம் மக்களது பெயா்களை மன்னாா் பிரதேசத்தில் உள்ள தோ்தல் இடாப்பில் இம்முறை சோ்க்காது நீக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இது அவா்களது வாக்குரிமை மட்டுமல்ல அடிப்படி உரிமை மீறல் என நான் எழுப்பிய கேள்வி எழுப்பினேன்.


அதற்கு பதில் அளித்த தோ்தல் ஆணையாளா் – புத்தளத்தில் வாழ்ந்தால் அந்த மாவட்டத்திலேயே அவா்கள் தமது வாக்குகளை பதிய வேண்டும். அவா்கள் இந்த பிரதேசத்தில் வாழ்நது கொண்டு மன்னாாில் வாக்கு பதிய முடியாது அல்லது அவா்கள் அங்கு அவா்களது இருப்பிடம் வதிவிடம் இருப்பின் அங்கு போய் வாழ வேண்டும்.


புத்தளத்தில் வீடு, பாடசாலை, தண்ணீர்,மின்சாரம், வீட்டு வரி, பாதை பாவிப்பாா்களேயானால் அந்த பிரதேசத்தில் உள்ள உள்ளுராட்சி மாகாண சபை பாராளுமன்ற உறுப்பிணா்களுக்கே அவா்கள் வாக்களித்தல் வேண்டும். இங்கு வதிவிடம் மன்னாரில் வாக்கு அளிப்பது என்பது இனி சாத்தியப்படாத காரியம் . அல்லது மன்னாரிலிருந்து இடம்பெயா்ந்தவா்கள் அங்கு அவா்களுடைய வீடு, காணிகள் சொத்துக்கள் இருப்பின் அங்கு போகி வாழுல் வேண்டும் அங்கு உள்ள கிராம சேவகரிடம் பதிய வேண்டும்.


ஆகவே இம்முறையில் இருந்து புத்தளத்தில் வாழ்ந்து கொண்டும் இப்பிரதேசத்தில் சகல அரச அனுகூலங்களை அனுபவித்துக் கொண்டு மன்னாரில் வாக்குரிமை வழங்க முடியாது அத்துடன் வாக்களிப்பதற்கும் நாங்கள் பிரயாணம் ஒழுங்குகள் செய்து கொடுக்க முடியாது என திட்டவட்டமாகச் தோ்தல் ஆணையாளா் பதில் அளித்தாா்.


இது போன்று வடக்கின் இடம்பெயா்ந்த தமிழ் மக்களுக்கும் பிரச்சினை உள்ளன.


கேள்வி: ஏன் இதுவரை 9 மாகாண சபைகளது தோ்தல் நடாத்தப்படாமல் மூன்று வருடங்களும் 6 மாதங்களும் கடந்து விட்டன. மாகாணசபைகள் ஆளுனா்களது நிர்வாகத்தின் கீழ் நிர்வாகங்கள் நடைபெற்று வருகின்றன ? என கேள்விஎழுப்பினேன்.


பதில்: தோ்தல் ஆணையத்தின் தலைவா் அன்மையில் பிரதமரை சந்தித்து மாகாணசபை தேர்தல் பழைய முறைமையா அல்லது புதிய முறைமையா என பாராளுமன்றத்தில் சமா்ப்பித்து அறிக்கையை கேட்டுள்ளோம். அந்த அறிக்கை கிடைக்கும் வரை காத்து இருக்கின்றோம். சகல கட்சிகளது தலைவா்களை அண்மையில் சந்தித்து மாகாணசபைத் தோ்தல் பற்றி கலந்து ஆலோசித்தோம்.


$ads={2}


ஒரு இரு சிறிய கட்சிகளைத் தவிர சகல கட்சிகளும் மாகாண சபைத் தோ்தலை ஒரே முறையில் 09 மாகாணங்களிலும் நடத்துவதுக்கு விருப்பம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நிர்வாகத்தினை விட மாகாண சபையின் கீழ்தான் சகல அரச அதிகாரங்களும் நிர்வாகங்களும் உள்ளது. குறிப்பாக மாகாணசபையின் பிரநிதிகளின் 4 வருடகாலங்கள் முடிவடைந்ததும் உடன் 3 மாதங்களுக்குள் தோ்தல் நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.


ஆனால் மூன்றரை வருடங்கள் கடந்து விட்டன என தோ்தல் ஆணையத்தின் தலைவைா் தெரிவித்தாா். இலங்கையில் மாகாண சபை முறைமையை யாரும் நீக்க முடியாது. அது இலங்கை அரசியல் யாப்பில் உள்ள அதிகார முறைமையாகும். என பதிலளித்தார்.


-அஷ்ரப் ஏ. சமத்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.