க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்!


க.பொ.த சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளுக்காக பரீட்சைகள் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை onlineexams.gov.lk என்ற இணையளத்தினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விண்ணப்பப் படிவங்கள் இணையத்தளமூடாகவே நிரப்பபட்டு அதிபரின் பரிந்துரையுடன் பதிவுத் தபால் ஊடாக அனுப்பபட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் பரீட்சைகள் ஆணையாளர், பரீட்சைகள் திணைக்களம், பெலவத்த, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு இதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post