இந்திய அணி வரலாற்று வெற்றி – டெஸ்ட் தொடரையும் வென்றது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய அணி வரலாற்று வெற்றி – டெஸ்ட் தொடரையும் வென்றது!

இந்தியா – ஆஸ்திரேலிய அணியின் நான்காம் டெஸ்ட் போட்டியை இந்தியா அற்புதமாக ஆடி வென்றிருக்கிறது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுஷேன்108 ரன்கள் அடித்தார்.

இந்திய பவுலர்களில் தமிழகத்தில் நடராஜன் 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


$ads={2}

முதல் இன்னிங்கிஸ் பேட்டிங்கில் இந்திய அணி தரப்பில் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மற்றும் சுப்னம் கில் இருவரும் ஓப்பனிங் இறங்கினார்கள். ரோஹித் சர்மா 44, கில் 7 ரன்கள், புஜாரா, 25 ரகானே 37, மயங்க் அகர்வால் 38, ரிஷப் பண்ட் 23 என்கின்ற வரிசையில் ஆட்டமிழந்தனர். ஆனால் வாஷிங்டன் சுந்தர் – ஷர்துல் தாகூர் இருவரும் சேர்ந்து அதிரடியான பார்ட்னர்ஷிப் போட்டனர். வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களையும் தாக்கூர் 67 ரன்களையும் விளாசினர். இறுதியாக இந்திய அணி 10 விக்கெட் விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை குவித்தது.


ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் சில வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அடித்து ஆட வேண்டும் என்று நினைத்ததால் விரைவாக விக்கெட் விழுந்தன. குறிப்பாக லபுஷேன், வேட், டிம் விக்கெட்டுகள் விரைவில் விழுந்தன.


இந்திய பவுலிங்கில் முகம்மது சிராஜ் அற்புதமாக வீசி 5 விக்கெட்டுகளைப் பறித்தார். அதேபோல ஷ்ர்துல் தாகூட் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

328 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு இந்திய அணி ஆடியது. ரோஹித் ஷர்மா 7 ரன்களோடு அவுட்டாகி இம்முறை ஏமாற்றினார். கில் அற்புதமாக ஆடி 91 ரன்கள் அடித்தார். ராஹானே 24 ரன்களோடு அவுட்டானார். புஜாரா 52 ரன்களோடும், விக்கெட் கீப்பர் 32 ரன்களோடு ஆடி வருகின்றனர்.

24.5 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கில் இந்திய வீரர்கள் ஆடினார்கள். புஜாரா 56 ரன்களோடும், மயங் அகர்வா 9 ரன்களோடு ஆட்டமிழந்தனர்.




ஆனால், சென்ற இன்னிங்க்ஸில் அசத்தலான ஆடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இம்முறையும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் போல்டானர்.

24 பந்துகளில் 10 ரன்கள் எனும் உச்சகட்ட பரபரப்பை ஆட்டம் கண்டது. ரிஷப் பண்ட் ஒரு பவுண்ட்ரி அடித்து வயிற்றில் பால் வார்த்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார் பண்ட். அதற்கு அடுத்த பந்தில் இரண்டு ரன்களை அடித்தார் ஷர்துல் தாகூரி. ஆனால், அந்த ஓவரின் 4-ம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஷர்துல் தாகூர். இதனால், ஆட்டம் இன்னும் விறுவிறுப்பை அடைந்தது. கடைசியில் ஒரு பவுண்டரியை விளாசினார் பண்ட். அதனால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

இந்தியா – ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 2:1 எனும் கணக்கில் இந்திய தொடரையும் வென்றுள்ளது.

கோஹ்லி இல்லை
பும்ரா இல்லை
ஷமி இல்லை
இஷாண்ட் ஷர்மா இல்லை
உமேஷ் யாதவ் இல்லை
அஷ்வின் இல்லை.
ஜடேஜா இல்லை


ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி அட்டவணையில் இந்தியா அணி இப்போது முதலிடத்தில் உள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.