மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் இருந்து இருவர் தப்பியோட்டம்!

மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் இருந்து இருவர் தப்பியோட்டம்!

கொரோனாவில் சந்தேகத்திற்கிடமான வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணும் மற்றொரு நபரும் நேற்று (15) பிற்பகல் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதால நாகொடை பொது மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்


கொரோனா வைரஸ் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் தென்பட்ட காரணத்தினால் கடந்த ஜனவரி 14 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறிற்ற பெண், அதே நாளில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.


$ads={2}

நேற்று காலை (15) வார்டு எண் 3 இல் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் விரைவான எண்டிஜன் பரிசோதனைக்காக தேடும் போது தப்பிச் சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் களுதரை சுஜாதா முதியோர் இல்லத்தில் வசிக்கும் 22 வயது பெண்ணும், அகலவத்தையை சேர்ந்த 34 வயதுடைய ஆண் ஒருவரும் என தெரிய வந்துள்ளது.

தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

(திவயின பத்திரிகை)

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.