தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழில் உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


$ads={2}

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தினூடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளம் 1,000 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயற்படுத்தும் வகையில் தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post