ஈரானிய தலைவரின் ‘தடுப்புமருந்து’ டுவிட்டை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது!

ஈரானிய தலைவரின் ‘தடுப்புமருந்து’ டுவிட்டை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது!

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து குறித்து ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி வெளியிட்ட டுவிட் ஒன்றை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.


$ads={2}

அமெரிக்கா, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தடுப்பு மருந்துகள் முற்றிலும் நம்பகத்தன்மையற்றவை, அவர்கள் ஏனைய நாடுகளை மாசுபடுத்தாமலிருப்பதை விரும்பாமலிருப்பது சாத்தியமில்லை எனவும் ஆயதுல்லா அலி கமேனி டுவிட் செய்திருந்தார்.


இந்த டுவிட்டை டுவிட்ர் நிறுவனம் நீக்கியதுடன் டுவிட்டர் விதிமுறைகளை இந்த டுவிட் மீறியுள்ளதாக தெரிவித்தது.


டுவிட்டர் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருணுவர் நேற்று சனிக்கிழமை இது தொடர்பாக கூறுகையில், இந்த டுவிட் விசேடமாக எமது கொவிட்-19 தொடர்பாக தவறான தகவல் கொள்கையை மீறுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.


இத்தகைய டுவிட்களை வெளியிட்டவர்கள், தமது கணக்கை மீள செயற்படுத்தும் உரிமையை மீளப்படுத்வதுவதற்கு முன் இத்தகைய டுவிட்களை நீக்க வேண்டியிருக்கும் எனவும் அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post