அமைச்சராகவுள்ள ஞானசார தேரர்? ரதன மற்றும் ஞானசார தேரர்களிடையே இருந்த இணக்கப்பாட்டை போட்டுடைத்தார் ஞானசார!

அமைச்சராகவுள்ள ஞானசார தேரர்? ரதன மற்றும் ஞானசார தேரர்களிடையே இருந்த இணக்கப்பாட்டை போட்டுடைத்தார் ஞானசார!


எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், குறுகிய காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, அதனை தனக்கு வழங்கும் இணக்கப்பாடு இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தகவல் வெளியிட்டுள்ளார்.


அத்துரலியே ரதன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று அல்லது ஆறு மாதங்கள் பதவி வகிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.


$ads={2}


இப்படியான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டே ரதன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.


இந்த இணக்கப்பாடு சம்பந்தமாக ரதன தேரருடன் உடன்படிக்கையோ, கொடுக்கல் வாங்கல்களோ இல்லை. இது நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு. உறுதியளித்தது போல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது ரதன தேரரின் கைகளிலேயே உள்ளது.


அத்துரலியே ரதன தேரர், பதவி விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எனக்கு வழங்காவிட்டாலும் அந்த பதவியின் மூலம் நான் செய்ய நினைத்த சேவையை செய்வேன். அவர் நம்பிக்கையை மீறி செயற்பட்டால் எனது சேவை தொடரும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பிரச்சினையில்லை எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரதன தேரர் கடந்த 5 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். சிறிது காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது குறித்து அவர் இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post