அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளால் சுகாதாரத்துறை மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது! நலிந்த ஜயதிஸ்ஸ

அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளால் சுகாதாரத்துறை மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது! நலிந்த ஜயதிஸ்ஸ


அரசாங்கத்தின் தவறான முடிவுகள் காரணமாக உள்ளூர் சுகாதாரத்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


கொரோனாவைரசிற்கு எதிராக விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளிற்கு பதில் புராணக் கதைகளை நம்புவது பெரும் தவறு என அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தபடி மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றியதால் முதலாவது அலை கட்டுப்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.


எனினும் இரண்டாவது அலையின் போது சுகாதார அமைப்பின் மீது நம்பிக்கை குறைவடைந்ததால் மக்கள் அவர்கள் தெரிவிப்பதை செவிமடுக்க தவறிவிட்டனர் எனவும் ம.வி.முவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் சுகாதார அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் சபாநாயகர் போன்றவர்கள் தேவையற்ற ஊக்குவிப்புகளை முன்னெடுத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post