கொழும்பில் மேலும் இரண்டு பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்!

கொழும்பில் மேலும் இரண்டு பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்!

கொழும்பில் இரண்டு பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது. 

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் புனித அன்ரூஸ் வீதி, புனித அன்ரூஸ் மேல் மற்றும் கீழ் வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

$ads={2}

இதேவேளை, இலங்கையில் நேற்றும் மட்டும் 467 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,241 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் நேற்றைய தினம் 565 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

6,934 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 583 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post