ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து மேலுமொரு நபர் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக நியமனம்!

ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து மேலுமொரு நபர் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக நியமனம்!


இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் இலங்கை தேசிய அணியின் பதில் பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளார்.


இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையில் அடுத்து நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் அணியின் முகாமைத்துவர் இவருக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


முகாமையாளராக கடமையாற்றிய அசந்த டி மெல், இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் இடையில் பதவியில் இருந்து விலகினார்.


ஜெரோம் ஜயரத்ன, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷவின் மனைவி டட்யானா ஜயரத்னவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post