தடுப்பூசி குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை! -சுகாதார சேவைப் பணிப்பாளர்

தடுப்பூசி குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை! -சுகாதார சேவைப் பணிப்பாளர்

தடுப்பூசி குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

எனினும் இந்த வாரம் அல்லது எதிர்வரும் வாரத்தில் தடுப்பூசி தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கக் கூடிய சாத்தியம் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தடுப்பூசி ஒன்றை பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த தைப்பொங்கல் நிகழ்வுகளின் போது அனைவரும் வீடுகளில் இருந்து கொண்டாடுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post