கொரோனா - நேற்றைய தொற்றாளர்களின் முழு விபரம் (தமிழ்)

கொரோனா - நேற்றைய தொற்றாளர்களின் முழு விபரம் (தமிழ்)

இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 557 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதில் 380 பேர் மேல் மாகாணத்தை அதாவது 192 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 127 பேர் கம்பஹாவையும் 61 பேர் களுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 25 பேர் காலியைச் சேர்ந்தவர்கள் என்றும் இரத்தினபுரியில் 29 பேரும் மாத்தறை மற்றும் மட்டக்களப்பில் தலா 17 பேரும் கண்டியில் 16 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் குருநாகலில் 14 பேருக்கும் நுவரெலியாவில் 11 பேரும் பொலன்னறுவை மற்றும் புத்தளத்தில் தலா 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் 5 பேருக்கும் கேகாலையில் 4 பேருக்கும் அம்பாறை மற்றும் பதுளையில் தலா 03 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


$ads={2}

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 36 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளதுடன் 7 ஆயிரத்து 493 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 208 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post