தற்கொலை குண்டுதாரியாக உருவெடுக்க போகின்றாரா அசாட் சாலி?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்கொலை குண்டுதாரியாக உருவெடுக்க போகின்றாரா அசாட் சாலி?

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்காவிட்டால் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படுமென அஸாத் சாலி தெரிவித்திருக்கிறார்.

அவ்வாறெனின் அவர் தற்கொலைக் குண்டுதாரியாக மாறப்போகின்றாரா? அஸாத் சாலி உள்ளடங்கலாக இவ்வாறு அடிப்படைவாத நோக்கில் செயற்படும் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச வலியுறுத்தியிருக்கிறார்.


$ads={2}

கொழும்பில் நேற்று (06) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஒட்டுமொத்த உலக நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் வைரஸ் தொற்றினால் உயிரிழப்போர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களது சடலங்களைத் தகனம் செய்ய வேண்டுமென்ற தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களுக்கு மாத்திரமே தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டதுடன் ஏனைய நோய்களால் உயிரிழப்போரின் சடலங்களுக்கு அவர்களது மதமுறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
$ads={1}

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.