நுவரெலியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது!

நுவரெலியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது!

நுவரெலியாவில் மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று (09) பதிவாகியது.

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 01 ஆம் திகதி நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுய தனிமைப்படுத்தலில் இருந்த இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாகவே இவரை நுவரெலியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர் நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


$ads={2}

நுவரெலியாவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 3 ஆம் திகதி மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்பு இவர் நுவரெலியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் இறுதிக்கிரியைகள் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக நுவரெலியா பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.(க.கிஷாந்தன்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post