கொரோனா தொற்றுக்கு உள்ளான பவித்ரா ஹிக்கடுவை சிகிச்சை நிலையத்திற்கு!

கொரோனா தொற்றுக்கு உள்ளான பவித்ரா ஹிக்கடுவை சிகிச்சை நிலையத்திற்கு!


கொரோனா தொற்றுக்கு உள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஹிக்கடுவையில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் மற்றும் PCR பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.


இதேவேளை, சுகாதார அமைச்சர் கடந்த சில தினங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post