ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறை குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வெட்டுப் புள்ளிகள் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது சிக்கலானது என அவர் தெரிவித்துள்ளார்.
$ads={2}
அத்துடன், இது தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு அமைச்சரவையின் ஊடாக கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விடயத்தில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றனவா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.