தேர்தல் நடத்தினால் கோட்டாவுக்கு தோல்வி நிச்சியம்; புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை?

தேர்தல் நடத்தினால் கோட்டாவுக்கு தோல்வி நிச்சியம்; புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை?


தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கத்திற்கு பாரிய தோல்வி ஏற்படுமென புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை விடுத்ததை அடுத்தே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


கண்டி செங்கடகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் கூறினார்.


$ads={2}


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


மாகாண சபைகளுக்கான தேர்தலை தற்சமயம் அரசாங்கம் நடத்தினால் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தோல்வி ஏற்படும் என்கின்ற தகவல் புலனாய்வுப் பிரிவுகளால் அரச உயர்பீடத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு அறிக்கைகளில் காணப்படுகின்றன.


இந்த அச்சம் காரணமாகவே அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்து வருகின்றது.


அரச புலனாய்வுத்துறை இரண்டு பகுதிகளாக புலனாய்வு செய்திருக்கின்ற நிலையில் அதில் அரசாங்கத்தின் படுதோல்வி நிச்சயமாக உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post