கம்பஹாவில் வெடிப்பு சம்பவம்; ஒருவர் பலி!

கம்பஹாவில் வெடிப்பு சம்பவம்; ஒருவர் பலி!

கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொட்டதெனியாவ பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றின் கொதிகலன் வெடித்ததில் அங்கு பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

$ads={2}

இந்த வெடிப்பு சம்பவத்தில் குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இந்திய பிரஜைகளே இவ்வாறு அனர்த்தத்திற்குள்ளாகி உள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post