
நுவரெலியா - நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்காக சென்ற இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (14) திகதி இரவு 10 மணியளவில் நல்லத்தண்ணி பொலிஸ் முன்னிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இரண்டு இளைஞர்களை சோதனையிட்ட போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கல்கிசை, தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் போதைப்பொருட்கள் ஆகியன இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.