இனரீதியான பதட்டத்தினை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட மேலுமொரு நபர் கைது!

இனரீதியான பதட்டத்தினை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட மேலுமொரு நபர் கைது!


இனரீதியான பதட்டத்தை தூண்டும் வகையில் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஃபவாஸ் மொஹமட் நிசார் 2021 ஜனவரி 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ரிமாண்ட் செய்ய கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


$ads={2}


தொழிலதிபர் தனது தனிப்பட்ட பேஸ்புக் கணக்கில் கருத்துக்க பகிர்ந்து கொண்டதாக சிஐடி அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். அவை பௌத்த பிக்குகள் மற்றும் பிற தனிநபர்களை இழிவுபடுத்தி இனப்பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் குறித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறவிக்கப்பட்டுள்ளது.


மேலும் சந்தேக நபரின் வியாபாரங்கள் நட்டமடைந்துள்ள நிலையிலும் அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டிய சிஐடி அதிகாரிகள், அவர் சட்டவிரோத முறையில் பணம் திரட்டியிள்ளாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு, கொழும்பு தலைமை நீதவான் மொஹமட் மிஹால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டுள்ளார்.மேலும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க சிஐடிக்கு உத்தரவிட்டார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post