அலுத்கம, திகன சம்பவங்களே சஹ்ரான் போன்ற தீவிரவாதிகளுக்கு ஒட்சிசன் அளித்தது! நீதி அமைச்சர்

அலுத்கம, திகன சம்பவங்களே சஹ்ரான் போன்ற தீவிரவாதிகளுக்கு ஒட்சிசன் அளித்தது! நீதி அமைச்சர்

அலுத்கம, திகன போன்ற இடங்களில் இடம்பெற்ற இனவாத தாக்குதல் சம்பவங்களே சஹ்ரான் ஹாசீம் போன்ற தீவிரவாதிகளுக்கு ஒட்சிசன் அளித்தது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் நேற்றைய தினம் (06) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}


1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற இனக்கலவரம் பிரபாகரன் போன்றவர்களுக்கு ஒட்சிசன் வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இனவாதத்தை கக்கும் ஓர் தளமாக நாடாளுமன்றம் அமைந்துவிடக் கூடாது எனவும், இன, மத ஐக்கியத்தை கட்டியெழுப்பும் பல்லின மக்களும் ஒரே நாட்டில் வாழக்கூடிய வகையிலான சூழ்நிலையை உருவாக்கும் களமாக நாடாளுமன்றம் அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


கருத்து சுதந்திரம் மிகவும் அவசியமானது எனவும் கருத்துச் சுதந்திர முடக்க நிலைமை ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு மிருகத்தனமாக செயற்படுவார்கள் அவர்களுக்கு இனமோ, மதமோ இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டின் சில ஊடக நிறுவனங்கள் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் கட்டியெழுப்புவதற்கு மாறாக இனவாத குரோத உணர்வுகளைத் தூண்டுவதில் முனைப்பு காட்டும் விதம் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற போதிலும் நிரபராதிகள் எவரும் தண்டிக்கப்பட்டோ, பாதிக்கப்பட்டோ விடக்கூடாது என்பது எனது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.$ads={2}


சுதந்திரம் கிடைக்கப்பெற்று 73 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் குறைவதற்கு பதிலாக கூடிச் செல்வதாகவே உணர்வதாகவும், நாடாளுமன்றமே இதற்கான உதாரணமாக காண்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post