
தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் யோசனையாக இது விரைவில் முன்வைக்கப்படவிருப்பதாக அபே ஜன பலய கட்சியின் எம்.பி அத்துரலியே ரத்தன தேரர் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்த போதிலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்த யோசனை இரத்தாகியது என்று அவர் கூறினார்.
முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ரத்தன தேரர், மீண்டும் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க தேவையான நடவடிக்கைகள் பூரணமாகிவருவதாகவும் தெரிவித்தார்.