பயணிகளுக்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பயணிகளுக்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

இலங்கைக்கு பயணிக்க விரும்பும் எந்தவொரு உள்நாட்டு அல்லது வௌிநாட்டு பயணியும் முன் அனுமதி பெறுவது அவசியம் என சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சு, இலங்கைத் தூதரகம் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்கள் ஆகியவற்றில் இதற்கான முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


$ads={2}

குறித்த பிரிவினரின் அனுமதி கிடைக்கப் பெற்ற பின்னர், அது குறித்த விபரங்கள், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபைக்கு அனுப்பப்படுவது அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விமானப் பயணச் சீட்டுகளை வழங்குதல் மற்றும் சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனங்களுக்கான தகவல்களை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் இதன் பின்னர் முன்னெடுக்கப்படும் எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான மின்னஞ்சல்களை, [email protected] எனும் முகவரிக்கு அனுப்புமாறு, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post