அடக்கம் செய்ய அனுமதி கோரி ஜனாதிபதிக்கு ACJU உணர்வுபூர்வமான கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடக்கம் செய்ய அனுமதி கோரி ஜனாதிபதிக்கு ACJU உணர்வுபூர்வமான கடிதம்!


கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.


இதன் பிரதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. 


$ads={2}


உலமா சபை, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,


தற்போது துரதிஷ்டவசமாக சர்ச்சைக்குரிய தலைப்பாக மாறியுள்ள ஒரு உணர்வு பூர்வமான விடயம் பற்றி இன்று நாம் எழுதுகிறோம். கொரோனா காரணமாக மரணிப்போரை தகனம் செய்வது தொடர்ந்து நடைபெறும் நிலையில் எமது பாரதூரமான அக்கறையை தெரிவிக்க விரும்புகிறோம். எமது இந்த வேண்டுகோள் பல்வேறு சர்வதேச சுகாதார அமைப்புகளினால் தயாரிக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் மருத்துவ நிபுணர்களால் வழிமொழியப்பட்ட வழிகாட்டல்களுக்கேற்ப அமைந்துள்ளது என்பதை வலியுறுத்துகிறோம்.


கொரோனா காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்யும் போது நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறப்படுவதையிட்டு பல கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அத்துடன் கொரோனா காரணமாக மரணிப்போரை கட்டாயமாக தகனம் செய்வதுதான் உயிரிழப்போரை அப்புறப்படுத்துவதற்கான ஒரே வழி என்பதை வேறு பல விடயங்களை காரணங்காட்டி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதையடுத்து கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளும் கொரோனா காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்யப்படுவதையே வழக்கமாக கொண்டுள்ளன. இந்த வழக்கம் காரணமாக எந்தவொரு சிக்கலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளோ ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை .


கொரோனா காரணமாக மரணிப்போரை புதைப்பதற்கு ஆதரவாக பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.


இஸ்லாமிய போதனைகளின்படி உயிரிழந்த ஒருவரின் சடலத்தை அடக்குவது மிகவும் முக்கிய கடப்பாடாகும். எனவே இந்த உரிமையை மறுப்பது முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் துன்பம் தரும் விடயமாகும். இந்த உரிமை மறுக்கப்படுவதால் முஸ்லிம் சமூகம் மிகவும் கவலைப்படுவதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளது.


கொரோனா காராணமாக மரணிப்போரை அடக்குவது தீங்கு விளைவிக்கும் என்றோ நோய் பரவுவதற்கு காரணமாகும் என்றோ கூறுவதற்கு உறுதியான சான்று எதுவும் இல்லை.


இந்நிலையில் கொரோனா காராணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட நடைமுறையை மேற்கு நாடுகள் இந்த விடயத்தில் தலையிட்டு நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு விடுமாறும் நாம் வலியுறுத்துகிறோம்.


பல்வேறு மதங்களையும் இனங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் இந்நாட்டை பலப்படுத்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதன் மூலம் அவர்கள் இலங்கையர்களாக அனைத்து சமூகங்களும் அமைதியுடனும் ஒற்றுமையுடன் வாழ விரும்புகின்றன என்பது அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை அந்த கடிதத்தில் கூறியுள்ளது.


https://acju.lk/en/news/acju-news/item/2059-letter-to-he-president-prime-minister-health-minister-director-general


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.