நாட்டில் 60 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

நாட்டில் 60 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!


நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.


அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 60,233 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை இன்று நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,520 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.


அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52,566 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் தொற்று உறுதியானவர்களில் 7,379 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 863 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 288 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post