கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 500 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 500 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த 6 ஊழியர்கள் நேற்று (11) கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 599 கொரோனா தொற்றாளர்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகளின் மாவட்ட பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா தெரிவித்ததுள்ளார்.


$ads={2}

நேற்று (11) அடையாளம் காணப்பட்ட ஆறு தொற்றாளர்களும் இந்திய முதலீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தொழிற்சாலையிலும், கணினி உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர்.

மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் நேற்று சீதுவ சுகாதாரப் பிரிவிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post