கொரோனா தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்கு தொடரும்!! -லாரன்ஸ் வொங்ச்

கொரோனா தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்கு தொடரும்!! -லாரன்ஸ் வொங்ச்


கொரோனாவின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்று சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

உலகில் கொரோனா முடிவுக்கு வர இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சிங்கப்பூர் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வொங்ச் எச்சரித்துள்ளார்.

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கொரோனா தடுப்­பூ­சி­கள் வந்து­விட்­ட­தால் படிப்­ப­டி­யாக அனைத்துல­கப் பய­ணத்­தைத் தொடங்க முடி­யும் என்­றா­லும், உல­கம் முழு­வ­தும் தடுப்­பூசி போடு­வது அவ்­வ­ளவு விரை­வா­க­வும் எளி­தா­க­வும் நடந்­து­வி­டாது. அத­னால் இவ்­வாண்­டி­லும் ஒரு­வேளை அடுத்த ஆண்டின் குறிப்­பிட்ட காலத்­தி­லும் பெரும் மாற்­றத்­திற்­கு உள்­ளான உல­கில் வாழ்வதற்கு எம் நாட்டவர்கள் தயா­ராக இருக்க வேண்­டும்," என கொரோனா தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­ நிலை பணிக்குழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு வோங் கூறினார்.

கொள்கை ஆய்­வுக் கழ­கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த சிங்­கப்­பூர் கண்ணோட்ட மாநாட்­டில் கலந்­து கொண்­ட­போது அவர் இவ்­வாறு பேசி­னார்.

முகக்­க­வ­சம் அணி­வது, பாது­காப்­பான இடை­வெ­ளியை உறுதி செய்வது, கூட்­டம் அதி­க­முள்ள இடங்­க­ளைத் தவிர்ப்­பது போன்றவை அன்­றாட வாழ்க்­கை­யின் ஒரு பகு­தி­யா­கத் தொட­ரும் என்று அமைச்சர் வோங் தெரி­வித்­தார்.

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் தோன்­றிய உரு­மாற்­றக் கிரு­மியை எதிர்த்­துச் செயல்­படும் திறனை இப்­போ­தைய தடுப்­பூ­சி­கள் கொண்­டி­ரா­மல் போக­லாம் என்று முதற்­கட்ட ஆய்வு முடி­வு­கள் காட்­டு­வதை ஓர் இடையூ­றாக அவர் குறிப்­பிட்­டார்.

அதே நேரத்­தில், கொரோனா கிரு­மி­யின் எல்­லா­வி­த­மான திரிபுகளுக்கு எதி­ரா­க­வும் செயல்­ப­டக்­கூ­டிய ஒரு தடுப்பு மருந்து கண்டு­பி­டிக்­கப்­ப­ட­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

மாறாக, சளிக்­காய்ச்­சல் தடுப்­பூசி போல, குறிப்­பிட்ட கால இடைவெளி­யில் புதிய வகை தடுப்­பூ­சி­களும் உரு­வாக்­கப்­ப­ட­லாம் என்­றும் திரு வோங் கூறி­னார்.

"பகிர்ந்த உல­கில் நாம் வாழ்­கிறோம் என்­ப­தும் எல்­லா­ரும் பாதுகாப்பாக இருக்­கும் வரை எவ­ருக்­கும் பாது­காப்­பில்லை என்பதுமே இதி­லி­ருக்­கும் அடிப்­ப­டைச் செய்தி," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சில நேர்­ம­றை­யான மாற்­றங்­கள் தோன்­ற­லாம் என்­றா­லும், கொரோனா தொற்­றுக்­குப் பிந்­தைய உல­கம் இப்­ப­டித்­தான் இருக்­கும் என எவ­ரா­லும் கூற முடி­யாது என்­றார் அவர்.

1918 சளிக்­காய்ச்­சல் பர­வ­லுக்­குப் பின் வெற்­றி­லைப் படிக்­கம் பயன்படுத்­து­வ­தும் பொது இடங்­களில் எச்­சில் துப்­பு­வ­தும் சுகாதாரமற்ற பழக்­கங்­க­ளா­கப் பார்க்­கப்­பட்­டதை அமைச்­சர் வோங் சுட்­டி­னார்.

அது­போல, சிங்­கப்­பூ­ரி­லும் சுகா­தா­ரப் பழக்­கங்­கள் குறித்­தும் சமூகப் பொறுப்பு குறித்­தும் கொரோனா பர­வல் பெரும் விழிப்­பு­ணர்வை ஏற்ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட திரு வோங், கைகுலுக்கு­வது போன்ற சில பழக்கவழக்­கங்­கள் ஒழிந்தே போக­லாம் என்­றும் சொன்னார்.

ஒவ்­வொரு முறை நோய்ப் பர­வ­லின்­போ­தும் ‘தொற்று அபா­யத்­தைக் குறைக்க புது­வ­கை­யில் முக­மன் கூறு­வோம்’ என்ற குரல்­கள் எழும் என்ற அமைச்­சர், சிங்­கப்­பூ­ரில் 2003 சார்ஸ் பர­வ­லின் போதும் அது நிகழ்ந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post