24 வயது வாலிபர் வெட்டிக்கொலை; பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை!!

24 வயது வாலிபர் வெட்டிக்கொலை; பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை!!


மீட்டியாகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கடந்த 25ஆம் திகதி இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டு அவரது கை துண்டிக்கப்பட்டு அருகிலுள்ள சந்தியொன்றில் வீசப்பட்ட சம்பவம் பட்டபொல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பின்னணியில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எனவே சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இந்த சம்பவத்தில் 24 வயதான இஷான் தரிது என்பவரே கொல்லப்பட்டவராவார்.


அத்துடன் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வாள், இரண்டு மன்னா கத்திகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.


இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்கும்படி பொலிஸ் பேச்சாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


மீட்டியாகொட பொலிஸ் பொறுப்பதிகாரி - 071 859 14 81


சிறப்பு இலக்கம் - 1997


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.