கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவால் 23 பேர் பலி!

கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவால் 23 பேர் பலி!


நோர்வேயில் கொரோனா தடுப்பூசியினை மருத்துவமனைகளில் முதலில் பெற்றுக்கொண்ட 23 பேர் அதன் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக நோர்வே மருந்துகள் முகாமைத்துவ பிரிவு (NoMA) அறிவித்துள்ளது.


இவ்வாறு இறந்தவர்கள் அனைவரும் பலவீனமான மற்றும் வயதான நோயாளிகள் எனவும் நோர்வே மருந்துகள் முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 85 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்தத் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


தடுப்பூசி போட்டுக்கொண்டபின் அதன் பக்கவிளைவுகளாக ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் குமட்டல் போன்ற பொதுவான பாதகமான எதிர்விளைவுகளால் சில பலவீனமான நோயாளிகள் இறந்திருக்கலாம் என இந்த ஆய்வுக்கும் தலைமை தாங்கிய மருத்துவர் சிகுர்ட் ஹார்டெமோ கூறினார்.


மிகவும் மோசமாக நோய் நிலைகளால் பாதிக்கப்பட்டு பலவீனமாக உள்ளவர்கள் தடுப்பூசியில் இலேசான பக்கவிளைவுகளால் கூட பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எனவே, இத்தகைய தரப்பினருக்கு தடுப்பூசி போடுவது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு டிசம்பர் 27 முதல் இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோர்வேஜியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post