20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் நாளை விவாதம் - தானே முன்வந்து ஆஜராகும் பைஸர் முஸ்தபா

20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் நாளை விவாதம் - தானே முன்வந்து ஆஜராகும் பைஸர் முஸ்தபா

பிறந்து இருபது நாட்களேயான குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர், சிரேஷ்ட ஐனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது சமூகத்திற்காக நீதிமன்றத்தில் தானாக முன் வந்து மனுத்தாக்கல் செய்து, தானே நீதிமன்றில் இவர் ஆஜராகவுள்ளார்.

பிறந்து இருபது நாட்களேயான குழந்தையின் ஐனாஸாவை (தகனம்) எரித்ததற்கு எதிரான இந்த உச்ச நீதிமன்ற வழக்கு, நாளை (22) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


$ads={2}

சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையிலான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர், குறித்த வழக்கில் வாதிடவுள்ளனர். மிகவும் ஆணித்தரமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் அத்துடன், மிகத் தெளிவாகவும் விரிவாகவும் நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், இந்த வழக்கு விசாரணைகளின்போது விவாதிக்கப்படவுள்ளது.

பிறந்து இருபது நாள் குழந்தையின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் பல பாகங்களிலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, லண்டன், ஜேர்மன், இந்தியா போன்ற நாடுகளிலும் கண்டனப் பேரணி்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post