முஸ்லிம் வணக்கஸ்தலங்களுக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்ட 16 சிறுவன் கைது!

முஸ்லிம் வணக்கஸ்தலங்களுக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்ட 16 சிறுவன் கைது!


சிங்கப்பூரிலுள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட 16 வயதான சிறுவனொருவன் அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதல்களின் நினைவு தினமான மார்ச் 15 ஆம் திகதி அன்று இந்த தாக்குதலை நடத்த குறித்த சிறுவன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கிறிஸ்ட்சர்ச் தாக்குதலை வீடியோ ஊடாக பார்த்த நிலையில், முஸ்லிம்களை பழி வாங்கும் எண்ணம் இந்த சிறுவனுக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.


16 வயதான மாணவர் அத்தகைய சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளையவர் மற்றும் தீவிர வலதுசாரி தீவிரவாத சித்தாந்தத்தால் இயக்கப்படும் முதல் கைதி என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post