உலக சுகாதார நிறுவனத்தினால் (WHO) வழங்கப்படவிருக்கும் கொரோனா தடுப்பூசியினை இவர்களுக்கு தான் முதலில் வழங்கப்படும் - சுகாதார அமைச்சர்

உலக சுகாதார நிறுவனத்தினால் (WHO) வழங்கப்படவிருக்கும் கொரோனா தடுப்பூசியினை இவர்களுக்கு தான் முதலில் வழங்கப்படும் - சுகாதார அமைச்சர்

உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு வழங்கவிருக்கும் கோவிட் 19 தடுப்பூசி கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் முதல் தடுப்பூசி என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி, நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் நெடுநாட்பட்ட நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


$ads={2}

இரண்டாவதாக, இந்த தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

இந்த தடுப்பூசியை இலங்கைக்கு 2021 க்குள் இலவசமாக வழங்க உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒப்புக் கொண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post