
இது அவர் குறித்த ஆயுர்வேத மருந்து கொரொனா நோய்க்கு நிவாரணி என பல சமூக வலைதளம் ஊடக பிரச்சாரம் மேற்கொண்டதன் விளைவாகவே நிகழ்ந்துள்ளது.
மேலும் குறித்த பாணியை இன்று (25) விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை பெற்றுக் கொள்ள மக்கள் கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நிற்பதாகக் கூறப்படுகிறது.
முந்தைய சந்தர்ப்பத்தில் கேகாலை மாவட்ட செயலாளர் தலையிட்டு குறித்த பாணி விநியோகத்தை நிறுத்திவிட்டார், இதன் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர்.
இலங்கையின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில், குறித்த பாணியை விநியோகத்திற்கு ஒப்புதல் பெற தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை இன்னும் பெறவில்லை என்று கூறியுள்ளது.
மேலும் குறித்த பாணியை விநியோகிக்க தம்மிக பன்டாரவுக்கு அனுமதி வழங்கவில்லை என்று அரசாங்கம் செய்தியாளர்களுக்கு தகவல் வழங்கியுள்ளது, ஆனால் ஆயுர்வேத துறையின் மருந்தியல் பிரிவினால் ஆயுர்வேத உணவாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் அவ்வாறு வினியோகம் செய்ய தடையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.