
இந்த நிலையில், ஒருவார காலத்தில் 15 இலட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கும் இயலுமை தங்களிடம் காணப்படுவதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.
$ads={2}
மேலும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்கள் தடுப்பூசியை பரிசோதிக்க முன்வந்ததாகவும், முதல் கட்ட மனித சோதனைகளில் பங்கேற்க 56 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடான ஈரானில் இதுவரை 12 இலட்சம் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்தோடு 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.