
இதனால், இங்கு நிரந்தரமாக பணிப்புரிந்த 45 குடும்பங்களை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்த தெமோதரை எல்லந்தை பகுதியில் அமையபெற்றிருக்கும் இந்த கல்குவாரியை இயங்கச் செய்வதற்கான வழிமுறைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இதனால், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த எல்ல பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் எஸ்.எம்.என்.குமுதினி கவனஈர்ப்பில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதன் போது தெமோதரை எல்லந்த பகுதியில் பழமையான கல்குவாரியில் 100க்கும் அதிகமானவர்கள் பணிப்புரிவதையும் இவர்களுக்கான தீர்வுகளையும் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் மிகவிரைவில் பெற்றுத்தருவதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.





