முழுமையான தொகுப்பு : 21 வயதில் மேயர் ஆகும் கல்லூரி மாணவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முழுமையான தொகுப்பு : 21 வயதில் மேயர் ஆகும் கல்லூரி மாணவி!

இந்தியாவின் குறைந்த வயது மேயராக கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பதவியேற்கும் ஏழை வீட்டு 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் குறித்த செய்தி தொகுப்பு.

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் முடவன்முகள் வார்டில் மிகக்குறைந்த வயதிலான வேட்பாளரை அறிமுகம் செய்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கும் இவருக்கும் மிகப்பெரிய வயது வித்தியாசம் என்றாலும் சுறுசுறுப்போடு பணியாற்றும் பெண் எனக்கூறி அக்கட்சி அறிமுகம் செய்த வேகத்திலேயே வேட்பாளரான ஆர்யா ராஜேந்திரன் விறுவிறுப்போடு வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் கேட்டார். எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் LIC ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் ஸ்ரீலேகா ஆகிய தம்பதியரின் இரண்டாவது மகளான இவர் தற்போது செயின் பால்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தந்தையின் அரசியல் பாதையை பின்பற்றி சிறுவயது முதலே ஆர்யா தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.

இதனால் சிறுவர்கள் சங்கத்தின் மாநில தலைவராகவும் மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார். இவரது சுறுசுறுப்பை புரிந்து கொண்டதால்தான் இவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சி இவரை இவரது குடியிருப்பு காணப்படும் வார்டில் வேட்பாளராக நிறுத்தியது தேர்தல் முடிவு வெளிவந்த போது ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்ற செய்தி அந்த வார்டு மட்டுமல்ல திருவனந்தபுரத்தையே பரபரப்புக்குள்ளாக்கியது அதற்கு காரணம் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே குறைந்த வயது கொண்டவர் என்பதோடு வெற்றி பெற்ற வேட்பாளர்களில் குறைந்த வயது கொண்டவர் ஆவார். மேலும் கட்சிக்காக மேற்கொண்ட களப்பணியில் தனக்கு கவுன்சிலர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்காத ஆர்யா ராஜேந்திரனுக்கு மணிமகுடம் போல அக்கட்சி மற்றொரு பதவியையும் தர முன்வந்துள்ளது. இதனால் இவர் இந்தியாவிலேயே குறைந்த வயது கொண்ட மேயராக திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவியில் அமர உள்ளார்.


$ads={2}

100 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில், மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 51 வார்டுகளையும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 வார்டுகளையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 34 வார்டுகளையும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 5 வார்டுகளையும் கைப்பற்றினர். தேர்தலின் முடிவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடத்தை பிடித்துள்ள நிலையில், இன்று அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக ஆரியா நடராஜனை அக்கட்சி தேர்வு செய்துள்ளது. முடவன்முகள் வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்ற ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் செயின்ட் பால்ஸ் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சாதாரண ஏழைக் குடும்பத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகளான இவர், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான எஸ்.எப்.ஐ மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

$ads={1}
இவர் பதவியேற்றால் நாட்டிலேயே குறைந்த வயது கொண்ட மேயராக இவர் விளங்குவார். ஆர்யா ராஜேந்திரனை எதிர்த்து எந்த கட்சி போட்டியிட்டாலும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடங்களை பெற்ற கட்சியாக உள்ளதால் ஆரியா ராஜேந்திரன் எளிதில் வெற்றி பெற்று மேயராக வாய்ப்புள்ளது. தனக்கு அதிர்ஷ்டமாக கிடைத்த மிகப்பெரும வாய்ப்பு குறித்து பிரத்தியேகமாக ஏசியா நெட்டிற்கு அவர் அளித்த பேட்டியில், சாதாரண மாணவியான எனக்கு ஏற்கனவே மாணவர் சங்கம், சிறுவர் சங்கம் ஆகியவற்றில் களப்பணி ஆற்றிய அனுபவம் உள்ளது. எனவே மேயர் பதவியையும் தனது வார்டின் கவுன்சிலர் பதவியையும் செம்மையாக செய்வேன் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளது. திருவனந்தபுரம் மாநகரத்தின் மேயராக மக்களுக்கு தன்னால் இயன்றவரை சிறப்பாக பணியாற்ற முடியும் என்ற திடமான நம்பிக்கை உள்ளது. தன்னைப் போன்ற சாதாரண வீட்டு இளம்பெண்ணுக்கு திறமை இருந்தால், தான் சார்ந்த அரசியல் கட்சி வாய்ப்பு வழங்கும் என்பதற்கு தனக்கு கிடைக்கின்ற பதவி சாட்சியாக அமைந்துள்ளது.

சிறுவயதிலேயே தந்தையின் அரசியலில் தாமும் பயணித்து அதன் விளைவாக சமூகத்தில் அனைவரும் திரும்பிப் பார்க்கிற அளவுக்கு வளர்ந்துள்ளேன். எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டமாக ஒரு பதவி எனக்கு வந்து சேர்ந்துள்ளது. கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்துகொண்டே மக்கள் பணியை தொடர திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். வரும் திங்கள் அன்று நடைபெறும் மேயர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் பதவி ஏற்கும் நாளை இவர் சார்ந்த கட்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த கேரள மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.