தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பிய இருவர் திடீர் மரணம்; PCR பரிசோதனையில் கொரோனா உறுதி!

தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பிய இருவர் திடீர் மரணம்; PCR பரிசோதனையில் கொரோனா உறுதி!


பலபிட்டிய - அஹுங்கல, அக்கர 20 எனும் பகுதியில் 54 வயதுடைய நபர் திடீரென இறந்த நிலையில், அவரது உடலில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.


மேலும் இந்த நபர் சில தினங்களுக்கு முன் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்களும், வீட்டில் 14 நாட்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்நிலையில் அவர் கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி தனது தனிமைப்படுத்தலை முடித்த அவர், டிசம்பர் 09ஆம் திகதி மதியம் இறந்துள்ளார்.


பின்னர் அவரது உடல் பலபிட்டிய - அஹுங்கல பகுதியில் உள்ள மயானத்தில் நேற்று (11) தகனம் செய்யப்பட்டுள்ளது.


இருப்பினும், அவரது உறவினர்களும் குறித்த தகனத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரது உடல் சாதாரண வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


$ads={2}


இதேவேளை, பாணந்துறை - மஹவில பகுதியை சேர்ந்த 68 வயது நபர் பாதையில் பயணிக்கும் போது சைக்கிளில் இருந்து விழுந்து இறந்துள்ளார், பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


பின்னர், பாணந்துறை - மாலமுள்ள மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post