
மாதும்புர பஹுவித போக்குவரத்து நிலையத்தில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை பொலிஸார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
$ads={2}
தங்கள் தனிப்பட்ட வாகனத்தில் கொழும்பிற்கும் வரும் நபர்கள் உரிய இடத்தில் நிறுத்திவிட்டு சொகுசு பேருந்து மூலம் பயண இடத்தை சென்றடையும் நடவடிக்கையே Park & Ride நடைமுறையாகும்.
கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை இதன் மூலம் குறைத்து போக்குவரத்து நெரிசலை இல்லாமல் செய்வதே இந்த நடைமுறையின் நோக்கமாகும்.
தினமும் காலை 6 மணியில் இருந்து 15 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த பேருந்துகளில் வைபை வசதிகள் உள்ளதுடன் விரைவில் இலத்திரனியல் அனுமதி பத்திரம் முறை ஒன்றை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.