$ads={2}
“நாங்கள் மூடிய ஹோட்டல்களை மீண்டும் திறந்தோம். ஏராளமான வீரர்கள், நடுவர்கள் மற்றும் பலர் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியிருந்தமையால் நிறைய வருமானம் வந்தது. போட்டிகளில் ஏராளமான அனுசரணையாளர்கள் இணைந்தனர், மேலும் வருமானம் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வந்தது, இதில் அணி உரிமையாளர்களிடமிருந்தும் ஏராளமான வருமானம் வந்தது. இது விளையாட்டு மற்றும் விளையாட்டு பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மிகவும் வெற்றிகரமான போட்டித் தொடராகும் ” என்று விக்ரமரத்ன மேலும் தெரிவித்தார்.
“கொரோனா வைரஸ் காரணமாக சுமார் ஒரு மாதமாக, வீரர்கள் மற்றும் போட்டிகளில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் வீட்டினுள்ளேயே அடைக்கப்பட்டிருந்தனர், மேலும் போட்டிகளுக்கு வெளியே எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் எந்த வெளிநாட்டினருடனும் தொடர்பு கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக, ஹம்பாந்தோட்டாவின் சூரியவெவ பிரதேசத்தில் இருந்து எளிதில் அணுகக்கூடிய ஷாங்க்ரி-லா, கிராண்ட் உடவலவே மற்றும் ஹில்டன் உள்ளிட்ட ஹோட்டல்கள் எல்பிஎல் தங்குமிடத்திற்காக நிரம்பியிருந்தன. இந்த ஹோட்டல்களுக்கு மேலதிகமாக, ஊழியர்களுக்கு மூடப்பட்ட பல ஹோட்டல்களும் மீண்டும் திறக்கப்பட வேண்டியிருந்தது.”
“எல்பிஎல்லின் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி தொடங்கும். இந்த போட்டி இதை விட வித்தியாசமான அனுபவம். புதிய அணியைச் சேர்ப்பது. அதுதான் திருகோணமலை அணி. விளையாட்டின் விதிகளில் சில மாற்றங்கள் இருக்கும். ஆனால் இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இறுதிப் போட்டிக்கு முன்னர் நாங்கள் ஒரு 'பிளே ஆஃப்' இனையிட தீர்மானித்துள்ளோம்,” என்று எல்பிஎல் போட்டி இயக்குனர் தெரிவித்தார்.