இன்று இலங்கை கிரிக்கட் அணி தென்னாபிரிக்கா நோக்கி புறப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று இலங்கை கிரிக்கட் அணி தென்னாபிரிக்கா நோக்கி புறப்பட்டது!

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுடனான சுற்றுப்பயணத்திற்காக இன்று காலை 10.55 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இலங்கை அணி கட்டாரின், தோஹா வழியாக பயணம்மேற்கொண்டு தென்னாபிரிக்காவைச் சென்றடையவுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் அனுசரணையுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

சர்வதேச உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் இந்த போட்டி நடைபெறும்.

அதன் பின்னர் இதே இலங்கை அணியானது ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் என்றும் இலங்கைகிரக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.


$ads={2}

தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணிக் குழமை நேற்றைய தினம் இலங்கைகிரிக்கெட் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த குழாமில் அஞ்சலோ மெத்தியூஸ் உள்வாங்கப்பட்டிருந்தாலும், லங்கா பிரீமியர் லீக்கின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாகஅவர் தென்னாபிரிக்காவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

எனினும் ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெத்தியூஸ் விளையாடுவார்.

இதேவ‍ேளை லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தொடரின் ஆட்ட நாயகன் விருதை வென்ற வானிந்து ஹசரங்கா, இலங்கைஅணிக் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அது மாத்தரமன்றி இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான லசித் எம்புல்தேனியா, தில்றுவான் பெரேரா ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பிடித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் சுற்றுப் பயணத்தில் அறிமுகமான லசித் எம்புல்தெனிய 23.83 என்றசராசரியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியமையும் விசேடஅம்சமாகும்.

ஒரு டெஸ்ட் சுற்றுப் பயணத்திற்கான அணியில் அதிகபட்ச வீரர்களின் எண்ணிக்கை 16 என்றாலும், கொவிட்- 19 நிலைமையினால்தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் 21 வீரர்களை தென்னாபிரிக்காவுக்கு அனுப்பிவைத்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட அணியில் ஏழு வேகப்பந்து வீச்சாளர்களும் 2019 தென்னாபிரக்காவுடனான சுற்றுப் பயணத்தில் சேர்க்கப்பட்டஅனைத்து துடுப்பாட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி வீரர்கள் விபரம் :

  1. திமுத் கருணாரத்ன – தலைவர்
  2. குசல் ஜனித் பெரேரா
  3. தினேஷ் சந்திமால்
  4. குசல் மெண்டீஸ்
  5. ஓசத பெர்னாண்டோ
  6. தனஞ்சய டிசில்வா
  7. நிரோஷன் திக்வெல்ல
  8. மினோட் பானுக
  9. லஹிரு திரிமான்ன
  10. லசித் எம்புலுதெனிய
  11. வனிந்து ஹசரங்க
  12. தில்றுவான் பெரேரா
  13. சுரங்க லக்மால்
  14. லஹிரு குமார
  15. விஷ்வ பெர்னாண்டோ
  16. கசூன் ராஜித
  17. துஷ்மந்த சமீர
  18. தசூன் சானக்க
  19. சந்தூஷ் குணதிலக்க
  20. அசித பெர்னாண்டோ
  21. தில்ஷான் மதுசங்க

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.