தேசிய கீதத்தில் இசையிருக்கிறதே? அதனை பாட வேண்டும்! என்ன செய்வீர்கள்? ஆணைக்குழுவில் CTJ அப்துர் ராஸிக் சாட்சியம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய கீதத்தில் இசையிருக்கிறதே? அதனை பாட வேண்டும்! என்ன செய்வீர்கள்? ஆணைக்குழுவில் CTJ அப்துர் ராஸிக் சாட்சியம்!

தவ்ஹீத் கொள்ளையில் எவ்வித பிழையும் இல்லை. அது சரியான கொள்கை தான் ஆனால் தவ்ஹீத் இயக்கங்களுக்கு மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (14) வழங்கிய சாட்சியத்தின் போது தெரிவித்தார்.

ஏப்ரல் 21 - உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவில் நேற்று (14) முதல் நாளாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் சாட்சியம் வழங்கினார். 

இதன் போது, தவ்ஹீத் பெயரில் இயங்கும் அமைப்பினர்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவில் சென்று உங்கள் செயல்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டி சாட்சியம் வழங்குங்கள் என தவ்ஹீத் அமைப்புகளுக்கு நீங்கள் அறிவுறுத்தியது ஏன்? என வினவப்பட்ட நேரத்தில் தவ்ஹீத் அமைப்புகளுக்கு மத்தியில் மார்க்க ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் - NTJ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 3 அமைப்புக்களை தவிரவுள்ள அமைப்புக்கள் ஜனநாயக ரீதியில் செயல்படுபவையாக இருக்கின்ற காரணத்தினால் அது தொடர்பில் உரிய தெளிவுகளை ஆணைக்குழுவில் வழங்குங்கள் என்று அறிவித்தோம்.

அப்படியானால், தவ்ஹீத் கொள்கையில் பிழையில்லை என்று கூறுகின்றீர்களா? என்று ஆணைக்குழுவில் கேட்ட நேரத்தில் ஆம், ஏகத்துவக் கொள்கையில் எவ்வித பிழைகளும் கிடையாது என அப்துர் ராசிக் பதிலளித்தார்.

ஆடல், பாடல், நடனங்களை பற்றி என்ன சொல்கிறீர்கள் என ஆணைக்குழுவில் கேட்க்கப்பட்ட நேரத்தில் இஸ்லாத்தில் இசை தடுக்கப்பட்டுள்ளது. இசையில்லாமல் ஒருவர் அர்த்தமுள்ள பாடல்களை பாடுவதில் தவறில்லை. என அப்துர் ராசிக் பதிலளித்த நேரத்தில் ஒருவர் வாகனம் ஓட்டும் போது இசையுடன் கூடிய பாடலொன்றை கேட்டால் என்ன செய்வீர்கள்? என ஆணைக்குழுவில் கேள்வியெழுப்பப்பட்ட போது, இசையுடன் பாடல் கேட்ப்பது மார்க்கத்தில் தவறு என உபதேசம் செய்வோம் என்று அப்துர் ராசிக் பதிலளித்தார்.

பாடல் கேட்ப்பவர் தவ்ஹீத்வாதியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என ஆணைக்குழு சார்பில் கேள்வி மீண்டும் முன்வைக்கப்பட்ட  நேரத்தில், முஸ்லிமாக இருந்தால் பாடல் கேட்ப்பது தவறு என்று உபதேசம் செய்வோம் என அப்துர் ராசிக் பதிலளித்தார்.

$ads={2}

இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று குர்ஆனில் உள்ளதா என ஆணைக்குழு கேள்வியெழுப்பிய நேரத்தில் இசை தடை என குர்ஆனில் குறிப்பிடப்பட வில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான வழிகாட்டல்களில் தான் அதற்குறிய தடை இருக்கிறது. 

அப்படியானால் அதற்குறிய ஆதாரத்தை தர முடியுமா? ஆம் ஆதாரத்தை சபைக்கு ஒப்படைக்கிறேன் என அப்துர் ராசிக் பதிலளித்தார்.

இலங்கை தேசிய கீதத்தில் இசையிருக்கிறதே? அதனை பாட வேண்டும் என இலங்கை நாட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டால் என்ன செய்வீர்கள்? அப்போது இஸ்லாத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்களா? நாட்டு சட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்களா? என ஆணைக்குழு கேள்வியெழுப்பியது. 

எமது அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளில் இஸ்லாத்தின் வழிகாட்டல்களை தான் பின்பற்றுவோம். நாட்டு சட்டத்தில் குறிப்பிடப்படும் விவகாரங்களில் நாட்டு சட்டத்திற்கு கட்டுப்படுவோம். 

தேசிய கீதத்தை இசைத்தேயாக வேண்டும் என சட்டமாக்கப்பட்டால் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் அது விதிவிலக்காகி விடும்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படக் கூடாது என நீங்கள் உரையாற்றியுள்ளீர்கள் தானே? எனது நினைவுப் பிரகாரம் அப்படி நான் உரையாற்றியதில்லை. மாறாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும், மற்ற மதங்களுக்கு சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றே நாம் நடத்திய வாழ்வியல் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தேன் என அப்துர் ராசிக் இதன் போது பதிலளித்தார்.

இன்று மீண்டும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

ஊடகப் பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.