COVID19 SECOND WAVE : கொழும்பில் 18,000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

COVID19 SECOND WAVE : கொழும்பில் 18,000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 639 பேரில் 133 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொவிட் – 19 இரண்டாவது அலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தவிர்த்து நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


$ads={2}

அதில் அவிசாவெல ஆடைதொழிற்சாலையில் 83 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கண்டி மாவட்டத்தில் 89 பேர், களுத்துறை மாவட்டத்தில் 50 பேர், அம்பாறை மாவட்டத்தில் 42 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 27 பேர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 21 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல கேகாலை மாவட்டத்தில் 19 பேர், குருணாகல் மாவட்டத்தில் 18 பேர், காலி மாவட்டத்தில் 10 பேர், மாத்தறை மாவட்டத்தில் 09 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 பேர் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம், திருகோணமலை மாவட்டத்தில் 04 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 03 பேர், புத்தளம் மாவட்டத்தில் 02 பேர், மொனராகலை மாவட்டத்தில் 02 பேர், பதுளை மாவட்டத்தில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் முல்லைத்தீவு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 03 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.