கொழும்பு கிங்ஸ் அணியின் பயிற்சிவிப்பாளர் திடீர் இடைநீக்கம்! ரங்கன ஹேரத் நியமனம்!

கொழும்பு கிங்ஸ் அணியின் பயிற்சிவிப்பாளர் திடீர் இடைநீக்கம்! ரங்கன ஹேரத் நியமனம்!


தென்னாப்பிரிக்காவின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஹெர்ஷெல் கிப்ஸ் கொழும்பு கிங்ஸ் உரிமையின் பயிற்சிவிப்பாளராக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


46 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரம்பத்தில் லங்கா பிரீமியர் லீக் 2020 டி20 போட்டியின் வர்ணனையாளராக இயங்க அழைத்துவரப்பட்டார், ஆனால் பின்னர் கொழும்பு கிங்ஸ் பயிற்சிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.


LPL போட்டியின் வட்டாரங்களின்படி, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தியோகபூர்வமாக காரணம் இன்னும் தெளிவாகத் அறியமுடியவில்லை.


$ads={2}


ஹெர்ஷெல் கிப்ஸுக்கு பதிலாக இலங்கை வீரர் ரங்கன ஹேரத் கொழும்பு கிங்ஸ் உரிமையின் பயிற்சிவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் ஹெர்ஷெல் கிப்ஸ் கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னரே இந்த இடைநீக்கம் ஏற்பட்டதாக ஊகிக்கப்படுகிறது என ரெக்ஸ் கிளெமெண்டைன் எனும் ஊடகவியலாளர் ட்வீட் செய்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post