இலங்கையில் இன்றைய கொரோனா தொற்றாளர்களின் விபரம்!

இலங்கையில் இன்றைய கொரோனா தொற்றாளர்களின் விபரம்!


இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக மேலும் 643 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதில் 575 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .


ஏனைய 68 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,480 ஆக உயர்ந்துள்ளது.


$ads={2}


அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 34,121 ஆக உயர்ந்துள்ளது.


தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 9,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா தொற்றால் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 24,867 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 709 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post