இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஓட்டங்கள்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஓட்டங்கள்!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத டெஸ்ட் இன்னிஸ்களில் ஒன்றாக தற்போதைய டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் இருக்கப் போகிறது. அதற்கு காரணம் இந்தியாவின் மோசமான பேட்டிங்.

21.2 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 36 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது இந்தியா. 90 என்ற இலக்கை இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது. இரவு உணவுக்காக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி ஆட்டமிழப்புக்கள் இன்றி 15 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்க்சில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.


$ads={2}

பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்தியா மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

முகமது ஷமி காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆனதால் இந்தியா ஆட்டத்தைத் தொடர முடியவிலை.

எனவே இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழப்பதற்கு முன்பே இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸை இவ்வளவு குறைவான ரன்களில் முடித்துக்கொள்வது இதுவே முதல்முறை

ஆட்டத்தின் முதல் நாளன்று டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இரண்டாவதாக பேட் செய்த ஆஸ்திரேலியா 191 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மூன்றாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சை பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.

புஜாரா, ரகானே அஸ்வின் ஆகிய மூவரும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர்.

இந்தியாவுக்காக களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியுள்ளன.

தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.

மயங்க் அகர்வால் இன்று எடுத்த ஒன்பது தாங்கள்தான் இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

மயங்க் அகர்வால் இன்றைய ஆட்டத்தில் 1000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார். தனது 19வது டெஸ்ட் இன்னிங்சில் இதை எட்டியுள்ள மயங்க் அகர்வால், 1000 டெஸ்ட் ரன்களை வேகமாகக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

14 இன்னிங்சில் கடந்த வினோத் காம்ப்ளி மற்றும் 18 இன்னிங்சில் கடந்த செதேஸ்வர் புஜாரா இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.