கல்முனையில் மற்றுமொரு பிரதேசம் முடக்கம்!

கல்முனையில் மற்றுமொரு பிரதேசம் முடக்கம்!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மற்றுமொரு பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கல்முனை கடற்கரை பள்ளி உள்ளடங்கலாக அம்மன் கோவில் வீதியில் இருந்து செயிலான் வீதி வரை  மறுஅறிவித்தல் வரை மூடப்படுவதாக  கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம். றகீப்  அறிவித்துள்ளார்.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் எழுந்தமானமாக எடுக்கப்பட்ட 90 பரிசோதனைகளில் 14 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

மேலும் பொது மக்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து உணவகங்களும் தற்காலிகமாக இன்று தொடக்கம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post