நாட்டின் சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பாக இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பாக இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று பரவலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் சுகாதார ரீதியான முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்படுமென அவர் தெரிவித்துளார்.

மேலும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து நாட்டில் பண்டிகைகளை கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நாட்டை பாதுகாப்பதற்காக மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தமையை இந்த இடத்தில் நினைவு கூறவேண்டுமெனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இதன்படி, எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் புது வருடப் பிறப்பு ஆகியவற்றின் போதும், பொதுமக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பண்டிகைக்காலத்தை அடிப்படையாக கொண்டு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post