
பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவருக்கு நேற்று (17) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய பொல்கஹவெல பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட மடலகம, பன்துவ, அளுத்கம ஆகிய பகுதிகளுக்கு நேற்று முதல் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பிரதேசங்களுக்குள் உட்பிரவேசித்தல் மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.