நுவரெலியாவில் கொரோனா பரவல் - பிளக்வோட்டர் தோட்டம் முடக்கப்பட்டது!

நுவரெலியாவில் கொரோனா பரவல் - பிளக்வோட்டர் தோட்டம் முடக்கப்பட்டது!

நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் இருந்து எவரும் வெளியேறுவதற்கும் அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகளுக்கு வெளியாட்கள் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.


$ads={2}

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள், மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடரும் எனவும் கூறியுள்ளனர்.

இதேநேரம், எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மேலும் 600 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது.

ஹட்டன், அம்பகமுவ பொது சுகாதார காரியாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாத்திரம் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post