நேற்று கொழும்பில் 371 தொற்றாளர்கள் - அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பொரளையில்!

நேற்று கொழும்பில் 371 தொற்றாளர்கள் - அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பொரளையில்!

இன்று காலை 06.00 மணிக்கு முடிவடைந்த கடைசி 24 மணி நேரத்திற்குள் கொழும்பு மாவட்டத்தின் பொரளையில் 192 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று இனங்காணப்பட்ட 371 தொற்றாளர்களில், பெரும்பான்மையான தொற்றாளர்கள் பொரளையிலிருந்து இனங்காணப்பட்டதாக கொரோமாதடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.


$ads={2}

பொரளையில் கண்டறியப்பட்டவர்களில் வெலிகடை சிறையில் இருந்து கொரோனா தொற்றுக்கு இலக்கான கைதிகளும் இருப்பதாக என்று செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பொரளையில் பல வீட்டுத் திட்டங்கள் இன்னும் பூட்டப்பட்ட நிலையில் இருப்பதாகவும், சமீபத்தில் குறித்த வீடுகளில் பி.சி.ஆர் சோதனைகள் நடாத்தப்பட்டதாகவும், வீட்டுத் திட்டங்களிலிருந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் மையம் தெரிவித்துள்ளது

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post